கடைகள்-நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வலியுறுத்தல்


கடைகள்-நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2022 1:29 AM IST (Updated: 27 Feb 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

கடைகள்-நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்க.ரத்தினவேல் தலைமையில், அக்கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் ஒரு மனு கொடுத்தனர். அதில், தமிழக அரசாணைகளின் படியும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படியும் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் கட்டாயமாக முதலில் தமிழிலும், அடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் முறையே அமைக்க வேண்டும். இதனை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை. எனவே இதனை பெரம்பலூர் மாவட்டத்திலும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதி செய்தும், கடைபிடிக்காத கடைகள், நிறுவனங்களின் மீது போர்க்கால நடவடிக்கை எடுத்து தமிழை பெயர் பலகையில் மீட்டெடுக்க வேண்டும், என்றும் கூறியிருந்தனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தமிழில் கையெழுத்து இடும் இயக்கத்தை நடத்தினர்.

Next Story