கடையம் அருகே 2 மிளாக்கள் மீட்பு


கடையம் அருகே 2 மிளாக்கள் மீட்பு
x
தினத்தந்தி 27 Feb 2022 11:37 AM IST (Updated: 27 Feb 2022 11:37 AM IST)
t-max-icont-min-icon

2 மிளாக்கள் மீட்பு

கடையம்:
கடையம் அருகே வடமலைசமுத்திரம்- கருத்தப்பிள்ளையூர் மெயின் ரோட்டில் சிவகல்யாணிபுரம் அருகில் நேற்று ஒரு மிளா நின்றது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வன காப்பாளர்கள் மணி, செல்வம் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று, அந்த மிளாவை பிடித்தனர். அதன் உடலில் லேசான காயம் இருந்ததால், அதற்கு சிகிச்சை அளித்து, பின்னர் அதனை ஆம்பூர் பீட் கசிவு ஓடையில் விட்டனர்.
இதேபோல் சிவகல்யாணிபுரத்தில் ஒரு தோட்டத்தில் நின்ற 3 மாத பெண் மிளா குட்டியையும் வனத்துறையினர் பிடித்து, ஆம்பூர் பீட் கசிவு ஓடையில் விட்டனர்.

Next Story