தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
வாகனங்கள் அகற்றப்பட்டன
ஆரல்வாய்மொழி, வடக்கூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளியின் நுழைவு வாயில் அருகில் சிலர் நிரந்தரமாக வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால், பள்ளி மாணவர்கள் நடைபாதையை விட்டு விலகி சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. எனவே, நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனங்களை அப்புறப்படுத்தினர். அத்துடன், பள்ளி முன்பு ‘வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த தரைப்பாலம்
பூதப்பாண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்புள்ள பெதஸ்தா நகர் செல்லும் சாலையில் ஒரு சப்பாத்து தரைப்பாலம் உள்ளது. பெதஸ்தா நகரில் வசிக்கும் மக்கள் இந்த பாலத்தை கடந்து தான் பூதப்பாண்டி, திட்டுவிளை பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த பகுதி வழியாக தினமும் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். தற்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டு கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தரைப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.தங்கம், பூதப்பாண்டி.
முடங்கி கிடக்கும் சாலை பணி
பத்மநாபபுரம் நகராட்சி 7 -வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.சி. தெருவில் உள்ள சாலையில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக சாலையில் சிறிய ஜல்லிகள் கொட்டப்பட்டது. அதன்பின்பு பல நாட்கள் ஆகியும் மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது அந்த சாலையை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், இந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக் கணக்கான மக்கள் மாற்றுப்பாதையில் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முடங்கி கிடக்கும் சாலை பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்டான்லி, ஆர்.சி.தெரு, பத்மநாபபுரம்.
சாலையில் பள்ளம்
நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது இங்கு சாலை மிகவும் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அனு, நாகர்கோவில்.
அகற்ற வேண்டிய மின்கம்பம்
திங்கள்சந்தை-அழகியமண்டபம் சாலையில் திருவிதாங்கோட்டில் தபால் நிலைய பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதன் அருகில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். மின்கம்பம் சாய்ந்து பேராபத்து ஏற்படும் முன்பு அதை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின் சிராயன்குழி
வேகத்தடை வேண்டும்
நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம் செல்லும் சாலையில் அழகப்பபுரத்தில் 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்கள் அருகில் பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனை, தேவாலயங்கள் போன்றவை அமைந்துள்ளன. இதனால், இந்த பகுதியில் சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் கடந்து செல்வார்கள். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் சாலையை கடந்து செல்ல முயல்வார்கள். அப்போது அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, விபத்துகளை தடுக்க சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ஹில்மன் புரூஸ் எட்வின், அழகப்பபுரம்.
Related Tags :
Next Story