மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பலி


மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பலி
x
தினத்தந்தி 27 Feb 2022 5:48 PM IST (Updated: 27 Feb 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பலியானார்கள்.

அண்ணன்-தம்பி

ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அணில். இவருடைய மகன்கள் ஆகாஷ் (வயது 15) மற்றும் ஹரிஸ் (13). அண்ணன்-தம்பி இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

நேற்று சகோதரர்கள் இருவரும், தங்கள் நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்தனர். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து மெரினா கடலில் குதூகலமாக குளித்து விளையாடினர்.

ராட்சத அலையில் சிக்கி பலி

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சகோதரர்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஸ் இருவரும் சிக்கிக் கொண்டனர். இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், இருவரையும் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கடலுக்குள் நீந்திச்சென்று 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனாலும் ஆகாஷ், ஹரிஸ் இருவரும் மூச்சுத்திணறி நடுக்கடலிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அண்ணன்-தம்பி இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story