ஊரக திறனாய்வு தேர்வில் 5100 மாணவ மாணவிகள் பங்கேற்பு


ஊரக திறனாய்வு தேர்வில் 5100 மாணவ மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Feb 2022 6:26 PM IST (Updated: 27 Feb 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 மையங்களில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 5100 மாணவ மாணவிகள் எழுதினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 மையங்களில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 5,100 மாணவ-மாணவிகள் எழுதினர்.

ஊரக திறனாய்வு தேர்வு

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 

கிராமப்புற பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதலாம். 

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் பிளஸ்-2 வரை ரூ.1,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தாண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு இன்று நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 

5100 ேபர் எழுதினர்

இதற்கு மாவட்ட முழுவதும் இருந்து 5 ஆயிரத்து 268 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 5,100 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மீதமுள்ள 168 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 

ஊரக திறனாய்வு தேர்வு காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினார்கள். 

மாணவ-மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கைக்கெடிகாரம், கால்குலேட்டர், ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையங்களை கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story