பூச்சி மருந்து குடித்து சென்னை மாநகராட்சி ஊழியர் தற்கொலை


பூச்சி மருந்து குடித்து சென்னை மாநகராட்சி ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2022 6:31 PM IST (Updated: 27 Feb 2022 6:31 PM IST)
t-max-icont-min-icon

பூச்சி மருந்து குடித்து சென்னை மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 31). இவர், சென்னை மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 24-ந் தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய காத்தவராயன், வீட்டில் திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. அவரது உறவினர் பலராமன், உடனடியாக காத்தவராயனை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், காத்தவராயன் பூச்சி மருந்து சாப்பிட்டு இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்த நிலையில் காத்தவராயன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story