‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் ஓடும் கழிவுநீர்
நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் பஸ்நிறுத்தம் அருகே சர்வீஸ் ரோடு அமைந்துள்ளது. அங்கு நடைமேடை அருகே சாக்கடை கழிவுநீர் வெகு நாட்களாக ஆறாக பெருக்கெடுத்து சாலையில் ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- பி.துரை, ராஜவல்லிபுரம்.
சீரான குடிநீர் வினியோகம் தேவை
பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் அமைந்துள்ள வ.உ.சி.நகர் பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவணன், கே.டி.சி.நகர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
மூலைக்கரைப்பட்டி பஞ்சாயத்து 11-வது வார்டு கூனிகுளம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.மணிகண்டன், கடம்பன்குளம்.
சாலையின் குறுக்கே பள்ளம்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பெரும்பத்து பஞ்சாயத்து வெய்க்காலிப்பட்டி இந்திரா புதுகாலனிக்கு செல்லும் சிமெண்டு சாலையில், கழிவுநீர் செல்வதற்காக குறுக்கே பள்ளம் தோண்டியுள்ளனர். ரேஷன் கடைக்கு இந்த வழியாக செல்லும் அனைத்து தரப்பினரும் மற்றும் வாகனங்களில் செல்வோரும் இப்பள்ளத்தில் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.. எனவே பள்ளத்துக்கு மூடி போட்டு சாலையை சமதளமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அற்புதஜெகன்பிரகாஷ், வெய்க்காலிப்பட்டி.
மின்மோட்டார் சரிசெய்யப்படுமா?
கடையம் யூனியன் முதலியார்பட்டி அம்மன் கோவில் தெருவில் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டியின் மின்மோட்டார் கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மின்மோட்டாரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கே.திருக்குமரன், கடையம்.
ஆபத்தான மின்பெட்டி
கடையம் யூனியன் ரவணசமுத்திரம் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் 2 மின்பெட்டிகள் உள்ளன. அதில் ஒரு மின்பெட்டி மிகவும் தாழ்வாக உள்ளது. மேலும் அந்த மின்பெட்டி சேதமடைந்த நிலையில் மின்வயர்களுடன் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் அங்கு விலக்கு பகுதியில் பஸ்சுக்காக குழந்தைகளுடன் காத்து நிற்பவர்களும், அந்த வழியாக நடந்து செல்பவர்களும் அச்சப்படுகிறார்கள். எனவே மின்கம்பத்தில் சற்று உயரத்தில் இருக்குமாறு புதிய மின்பெட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- அம்ஜத், முதலியார்பட்டி.
குண்டும் குழியுமான சாலை
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் பஞ்சாயத்து போப் காலனியில் பல ஆண்டுகளாக தார் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே புதிதாக தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பால்துரை, சாயர்புரம்.
ஆபத்தான மின்கம்பம்
கோவில்பட்டி தாலுகா கடம்பூர் அரசு மாணவர் விடுதி காம்பவுண்டு சுவர் அருகில் உள்ள மின்கம்பமானது காங்கிரீட் முழுவதுமாக பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- விஜயா, கடம்பூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவில்பட்டி புதுக்கிராமம் சிந்தாமணி நகர் 1-வது தெருவின் கீழ்ப்புறம் செல்லும் சாலையோரங்களில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. குப்பை தொட்டி மற்றும் குப்பை வண்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. குப்பைகளை தினமும் அகற்றாத காரணத்தினால் காற்றில் அடித்து செல்லப்பட்டு சாலையின் நடுவே கிடக்கின்றன. எனவே தினமும் குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லக்சன்யா, கோவில்பட்டி.
Related Tags :
Next Story