தினத்தந்தி புகார் பெட்டி
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
வேகத்தடை அமைக்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வெள்ளமண்டபம் கிராமத்தில் உள்ள பாலத்தின் அருகே உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த சாலை வழியாக இருசக்கரவாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக வேகமாக சென்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story