பெண்களிடம் சங்கிலி பறித்த 2 பேர் கைது


பெண்களிடம் சங்கிலி பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2022 8:52 PM IST (Updated: 27 Feb 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

நன்னிலம்:
பேரளம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 
வாகன சோதனை 
பேரளம் போலீசார் நேற்று கீரனூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். 
2 பேர் கைது 
விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சிவசங்கரன்(வயது20), தஞ்சை மாவட்டம் தியாகசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(20) ஆகியோர் என்பதும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பேரளம் அருகே உள்ள கம்பூர் பகுதியை சேர்ந்த அமுதவல்லி, சரபோஜி ராஜபுரம் பகுதியை சேர்ந்த கீதா ஆகியோரிடம் சங்கிலியை பறித்து சென்றதும்  தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரன், பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 
---


Next Story