அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இந்த நெல் மூட்டைகளை இங்கிருந்து எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பா அறுவடை
நாகை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் முடிவடைந்து உள்ளது.இந்த நெல்லை விற்பனை செய்ய தமிழக அரசு சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருமருகல், சீயாத்தமங்கை, பில்லாளி, கோட்டூர், திருப்பயத்தாங்குடி, ஆலத்தூர், அருள்மொழிதேவன், வவ்வாலடி, வடகரை, கொட்டாரக்குடி, காரையூர், குத்தாலம், நரிமணம், அம்பல், அண்ணாமண்டபம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் நிலையங்கள்
திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.இவ்வாறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பாலான அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. திடீரென மழை பெய்தால் திறந்த வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகும் நிலை உள்ளது. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஏற்படும் நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக எடுத்துச் சென்று பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story