மூதாட்டியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
மூதாட்டியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
மூலனூர்,
மூலனூர் அருகே முன்விரோதம் காரணமாக மூதாட்டியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரிவாளால் தாக்கி
கொலை மிரட்டல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்கோட்டம் மூலனூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட எம்.கொல்லப்பட்டியில் சுப்பிரமணியம்- நல்லாத்தாள் தம்பதிக்கும் பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் சுப்பிரமணி (வயது70)் குடும்பத்தாருக்கும் ஏற்கனவே கிணற்றில் நீர்ப்பாய்ச்சுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த நல்லாத்தாள் அவரது தோட்டத்திற்கு அருகில் வந்தபோது பக்கத்து தோட்டத்தில் இருந்த சுப்பிரமணி கையில் அரிவாளுடன் வந்து உன்னால்தான் இந்த கிணற்று பிரச்சினை ஏற்பட்டது. உன்னை கொல்லாமல் விடமாட்டேன் எனக்கூறி அரிவாளால் தாக்கியும் உள்ளார்.
கைது
்இதுபோல் சுப்பிரமணி மனைவி திருப்பதி (65) மற்றும் மகன் சக்திவேல் (33) ஆகியோர் நல்லாத்தாளை கையால் தாக்கியும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் காயம் அடைந்த நல்லாத்தாள் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நல்லாத்தாள் மூலனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story