உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவர்களை மீட்டு தரக்கோரி திருவள்ளூர் கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவர்களை மீட்டு தரக்கோரி திருவள்ளூர் கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த சில நாட்களாக போர்தொடுத்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் நாட்டில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்று வரும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை நாராயணபுரத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி முருகன் என்பவரின் மகன் ஜீவானந்தம், 4-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் ஆவடி அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்த ரெயில்வே ஊழியரான பாலாஜி என்பவரின் மகள் சந்தனா, 4-ம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்று வரும் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த மனோகர் என்பவரின் மகள் பிரியதர்ஷினி, திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்த ஜார்ஜ் அலெக்சாண்டர் சுரேஷ் என்பவரின் மகள் ஏஞ்சல் ஆகியோர் உக்ரைனில் தற்போது அங்கு நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் உயிருக்கு பயந்து அறையிலேயே முடங்கி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் போன் மூலம் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அதில், உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தங்களது மகன், மகள்களை பாதுகாப்பாக மீட்டு வந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்து இருந்தனர்.
Related Tags :
Next Story