அதியமான்கோட்டை அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் படுகாயம்
அதியமான்கோட்டை அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் படுகாயம் அடைந்தார்.
நல்லம்பள்ளி:
தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி கார் ஒன்று நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த. காரை தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியை சேர்ந்த யுவராஜ் (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார். அதியமான்கோட்டை அருகேயுள்ள குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் விபத்துக்குள்ளான கார் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story