அரகண்டநல்லூர் அருகே வயலில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
அரகண்டநல்லூர் அருகே வயலில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலூர்
அரகண்டநல்லூர் அருகே அருணாபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரகண்டநல்லூர் போலீசார், அருணாபுரத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பூங்காவனம் (வயது 32) என்பவர், அவரது வயலில் 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 20 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறல் மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து பூங்காவனத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story