குழந்தைகள், கணவர் இறந்த விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குழந்தைகள், கணவர் இறந்த விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 27). இவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் போலீசார் மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு கைலாசகிரி மலையில் உள்ள குளத்தில் மீனாட்சியின் குழந்தைகள் ஜஸ்வந்த் (8), ஹரிபிரீத்தா (6) ஆகியோர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து துக்கம் தாங்காமல் அவரது தந்தை லோகேஸ்வரன் அடுத்த நாள் ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உளளது.
Related Tags :
Next Story