தீக்காயம் அடைந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி சாவு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 Feb 2022 12:04 AM IST (Updated: 28 Feb 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

தீக்காயம் அடைந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி அகதிகள் முகாம் குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32). பெயிண்டரான இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் குளித்தலையில் உள்ள மொபைல் கடையில் தனியார் பைனான்ஸ் மூலம் மொபைல் ஒன்றை வாங்கியுள்ளார். இதில் தவணைத் தொகை கட்ட பணம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்த ராமச்சந்திரன் அடிக்கடி மதுபோதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மன உளைச்சலில் இருந்த ராமச்சந்திரன் பெயிண்ட் அடிக்கும் டின்னரை குடித்ததுடன் தன் உடலில் தீ வைத்து கொண்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story