தி.மு.க. செயற்குழு கூட்டம்
தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர்
கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த கரூர் மாவட்ட வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மார்ச் 1-ந்தேதி இனிப்பு வழங்கியும், கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்குதல், கல்வி படிப்பிற்கு நிதி உதவி, வேட்டி சேலைகள் வழங்குதல், ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story