ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பூக்களின் வருகை அதிகரிப்பு


ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பூக்களின் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2022 12:37 AM IST (Updated: 28 Feb 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பூக்களின் வருகை அதிகரித்து உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
அனைத்து சிவன் கோவில்களிலும் சிவராத்திரி நாளை சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு பொதுமக்கள் சிவன் கோவில்கள் மற்றும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வர். அவ்வாறு செல்லும் போது மலர்மாலை மற்றும் பூக்களை வாங்கி செல்வது வழக்கம். சிவராத்திரியைெயாட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விற்பனைக்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதியிலிருந்து  பூக்கள் வந்துள்ளன.  இதுகுறித்து பூ வியாபாரி ஈஸ்வரன் கூறியதாவது:- மற்ற நாட்களை விட சிவராத்திரியன்று பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும். ேகாவிலுக்கு செல்பவர்கள் உதிரி பூக்கள், பூ மாலை ஆகியவற்றை வாங்கி செல்வது வழக்கம். இதற்காக நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வந்து விட்டன. அதேபோல ஓசூர், ஊட்டி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரோஜா பூக்களின் வரத்தும் அதிகரித்து உள்ளது. மல்லிகை, சம்மங்கி, கேந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களின் வரத்தும் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு பூக்களின் வரத்தும் அதிகரித்து உள்ளதால் விற்பனையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 
இவ்வாறு அவர் கூறினார். 


Next Story