இருதரப்பினர் இடையே மோதல்; 6 பேர் மீது வழக்கு
தா.பழூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் இளவரசன். இவருக்கும் அமிர்தராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்த கலைவாணன் (வயது 38) என்பவருக்கும் இடையே வயலில் அறுவடை எந்திரம் கொண்டு செல்வதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் உதயநத்தம் கடைவீதியில் கலைவாணன் மற்றும் இளவரசனின் மகன் தமிழ்வாணன் (29) ஆகியோர் இடையே இது தொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கலைவாணன் தன்னை இளவரசன் மகன் தமிழ்வாணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் கலைவாணன், பன்னீர்செல்வம் மகன்கள் அமிதாப்பச்சன், நிலவுக்கரசன், ராமர் மகன் இளவரசன் ஆகியோர் தன்னை சாதிப் பெயரை கூறி திட்டி தாக்கியதாகவும் தனது கழுத்தில் இருந்த 3 சவரன் சங்கிலியை அறுத்து சென்றதாகவும் தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல் தமிழ்வாணன் தன்னை கலைவாணன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து கலைவாணன் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்வாணன், கலைவாணன், அமிதாப்பச்சன், நிலவுக்கரசன், இளவரசன் ஆகியோர் மீதும் தமிழ்வாணன் கொடுத்த புகாரின் பேரில் கலைவாணன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story