தி.மு.க. வேட்பாளர் மீது தாக்குதல்; அ.தி.மு.க. தொண்டருக்கு வலைவீச்சு
பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. தொண்டரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்,
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு அ.தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான சுவரொட்டியை அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் நேற்று இரவு மதனகோபாலபுரத்தில் வசிக்கும் நகராட்சி 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சேகர் (வயது 60) என்பவரது வீட்டின் சுவற்றில் ஒட்ட சென்றுள்ளார். இதனை கண்ட சேகர் சுவரொட்டியை இங்கு ஒட்டக்கூடாது என்று அவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சேகரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்த சேகரின் தம்பியான குமாரையும் (58) தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் தப்பி ஓடினார். இதில் காயமடைந்த சேகரும், குமாரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. தொண்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story