உலகிலேயே உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவில் கும்பாபிஷேகம்


உலகிலேயே உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 28 Feb 2022 1:34 AM IST (Updated: 28 Feb 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவிலுக்கு, ஏப்ரல் மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 146 அடி உயர முருகன் சிலையை வானில் தரிசனம் செய்ய ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம்:-
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவிலுக்கு, ஏப்ரல் மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 146 அடி உயர முருகன் சிலையை வானில் தரிசனம் செய்ய ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
146 அடி உயர முருகன் சிலை
மலேசிய நாட்டின் பத்துமலையில் முருகன் சிலை 140 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. உலகில் மிக உயரமான முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் புதிய மைல்கல்லாக 146 அடி உயர முருகன் சிலையை தற்போது வடிவமைத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீதர் குடும்பத்தினரின் பொருட்செலவில், சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில், முத்துமலை அடிவாரத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரமாக, 146 அடி உயரத்தில் முருகன் உருவச்சிலையை மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.
கும்பாபிஷேகம்
146 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான இந்த முருகன் சிலையுடன் கூடிய கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நிருபர்களிடம் கோவில் நிர்வாகி ஸ்ரீதர் கூறியதாவது:-
உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முத்துமலை முருகன் உருவச்சிலையின் திருமேனி கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், மேல்பூச்சு மற்றும் ஆடை, ஆபரணங்கள் அமைக்கும் நுண்ணிய கலை வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. முருகன் உருவச்சிலைக்கு வண்ணம் தீட்டும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து முருகன் உருவச்சிலையை பக்தர்கள் முழுமையாக கண்டு ரசிப்பதற்கு வசதியாக 146 அடி உயரத்திற்கும் நவீன ‘லிப்ட்’ அமைக்கும் பணிகளும், கோவில் கோபுரங்கள் மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம், தங்கும் விடுதி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரில் வழிபட  ஏற்பாடு
முத்துமலை முருகன் சிலை 3 ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில், முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முருகனை அருகில் தரிசனம் செய்ய ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story