வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்
அம்பை:
வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சிம்மராஜ சமுத்திரம் பிள்ளைமார் தெருவை சேர்ந்தவர் கோமதி (வயது 60). இவர் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரிகள் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோமதி கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொரு பெண்
இதேபோல் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி லட்சுமி (43). இவர் தீராத வயிற்று வலி காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவங்கள் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story