இரும்பு பொருட்கள் திருட்டு


இரும்பு பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 28 Feb 2022 2:15 AM IST (Updated: 28 Feb 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

4 வழிச்சாலை பணிக்கான இரும்பு பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திங்கள்சந்தை:
நாகர்கோவில்-திருவனந்தபுரம் 4 வழிச்சாலை பணியை ஒரு தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த பணிக்கு ேதவையான இரும்பு பொருட்களை அந்த நிறுவனம் வடக்கு நுள்ளிவிளை பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகில் வைத்துள்ளது. சம்பவத்தன்று அந்த தனியார் நிறுவனத்தின் பொறுப்பாளர் திருச்சி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பரிமணம் (வயது31) அந்த இரும்பு பொருட்களை பார்க்க வந்தார். 
அப்போது, பொருட்களை 2 பேர் திருடி ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பியோடி விட்டார். பின்னர், பிடிபட்ட நபரையும், திருட்டு பொருட்களுடன் ஸ்கூட்டரையும் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் வில்லுக்குறி அடுத்த மணக்காவிளையை சேர்ந்த அய்யப்பன் (31) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (34) எனபதும் தெரிய வந்தது. இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.

Next Story