மெட்ரோ ரெயில் ஊழியரை தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் கைது
மெட்ரோ ரெயில் ஊழியரை தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் கைது.
சென்னை,
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் பணி நடக்கிறது. இதனால் அந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், சாலையின் எதிர்திசையில் வந்தார். மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஒரு வழிப்பாதை என்பதை சுட்டிக்காட்டி, அந்த நபரை திரும்பி போகச்சொன்னார்கள். ஆனால் அந்த நபர், திரும்பிச்செல்ல மறுத்து மெட்ரோ ரெயில் ஊழியர்களிடம் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கே.கே.நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் மோட்டார் சை க்கிளில் வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் முத்து (வயது 32) என்று தெரிய வந்தது. அவர் தான், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story