பெருநகர சென்னை மாநகராட்சியில் மேயர் நாற்காலியை அலங்கரிக்கப்போகும் பெண் யார்?
பெருநகர சென்னை மாநகராட்சியில், மேயர் நாற்காலியை மூன்றாவதாக அலங்கரிக்கப்போகும் பெண் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சென்னை,
334 ஆண்டு கால வரலாற்று பாரம்பரியம் கொண்ட சென்னை மாநகராட்சி, கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவடைந்தது. அதுவரை, 155 வார்டுகளாக இருந்தது, 200 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
கடந்த தேர்தல் வரை, பெண்களுக்கு 33.3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலேயே வார்டுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், தற்போது 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளில், 100 இடங்கள் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டன. அதில், அரசியல் கட்சி சார்பிலும், சுயேச்சையாக போட்டியிட விரும்பினாலும் பெண்கள் மட்டுமே களம் இறங்க முடியும்.
102 பெண்கள் வெற்றி
அந்த வகையில், சரிபாதியாக 100 வார்டுகளில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், பொது வார்டுகளில் போட்டியிட்ட 2 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 102 பெண்கள் வாகை சூடியுள்ளனர்.
334 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியில், முதல்முறையாக ஆண்களைவிட பெண்கள் அதிகம் பேர் இடம்பெற உள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நாளை மறுநாள் (புதன்கிழமை) பதவியேற்க உள்ளனர். மேலும், மேயர் பதவியும் பெண்ணுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளதால், வருகிற 4-ந்தேதி நடைபெறும் மறைமுக தேர்தலில், தி.மு.க. பெண் உறுப்பினரே மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பெண் மேயர் யார்?
ஏற்கனவே, 2 முறை பெண் மேயர்கள் சென்னை மாநகராட்சியின் மேயர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர். இப்போது, மேயராக வர இருப்பவர் 3-வது நபராவார். எனவே, தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் பெண் மேயர் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
அதில், ஷீபா (122-வது வார்டு), ஆர்.பிரியா (74-வது வார்டு), கீதா (171-வது வார்டு), சமீனா (188-வது வார்டு) உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது. இதேபோல், துணை மேயர் பதவிக்கு சிற்றரசு (110-வது வார்டு), இளைய அருணா (49-வது வார்டு), தனசேகரன் (137-வது வார்டு) ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.
இறுதி வடிவம்
இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் மேயர் - துணை மேயர் பதவி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் - துணைத்தலைவர் பதவி ஆகிய இடங்களுக்கு யார்-யார்? என்ற பட்டியலை தி.மு.க. தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் நேற்று அனுப்பியுள்ளனர். அதற்கு, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இறுதி வடிவம் கொடுக்க இருக்கிறார்.
நாளை மறுநாள் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களில், தி.மு.க. தலைமையிடம் இருந்து மாநகராட்சி மேயர் - துணை மேயர், நகராட்சி தலைவர் - துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர் - துணைத் தலைவர் ஆகிய பதவி இடங்களுக்கு யார் - யார்? போட்டியிடுவார்கள் என்ற பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story