தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தியாகராஜர் ஆராதனை விழா


தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தியாகராஜர் ஆராதனை விழா
x
தினத்தந்தி 28 Feb 2022 4:20 PM IST (Updated: 28 Feb 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தியாகராஜர் ஆராதனை விழா நேற்று நடந்தது.

சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள சிரவணம் அரங்கில் தியாகராஜர் ஆராதனை விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். டாக்டர் பத்மா சுப்பிரமணியம், குமாரி கன்னியாகுமரி, டாக்டர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட 80 பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் பங்கேற்று பாடினார்கள். எம்.முரளி மற்றும் உள்ளூர் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பி.வி.ஆர்.கிருஷ்ணாராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 1½ மணிநேரம் பாடகர்கள் பாடினார்கள். திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்ய தயாரிப்பு பொருட்களான தூபப்பொடி, சாம்பிராணி கப், விபூதி, முக பவுடர் வகைகள், சோப், கோமியம், தரை தூய்மை செய்யும் பொருள், பசுஞ்சாண வில்லை கட்டிகள் விற்பனையும் தொடங்கி வைக்கப்பட்டது.


Next Story