வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள்; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் விழிப்புணர்வு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். இதில் மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஏராளமான படைப்புகள் வரவேற்கப்படுகிறது.
இதில் வினாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளுக்கு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வழங்கப்படும். இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் போட்டியின் விதிமுறைகளை https://ecisveep.nic.in/contest/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story