தாய்-மகனுக்கு வலைவீச்சு
நாகையில், சிறுமியை திருமணம் செய்த வாலிபரையும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் அபினேஷ் (வயது 22). இவர் தனது தாய் கோமதி உதவியுடன் 14 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.அந்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த அபினேஷ் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாயார் கோமதி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story