மகா சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை உயர்வு


மகா சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 28 Feb 2022 9:47 PM IST (Updated: 28 Feb 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் உள்ள பூமார்க்கெட்டுகளில் மகா சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை உயர்ந்தது.

உப்புக்கோட்டை:
தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி ஆண்டிப்பட்டி, மரிக்குண்டு, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செண்டுப்பூ, செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 
இங்கு விளைச்சலாகும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள பூமார்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூக்களின் விலை குறைவாக இருந்தது. 
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மாசி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பூக்களின் விலை அதிகரித்து வந்தது. இதற்கிடையே இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில்களில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது. இதையொட்டி பூக்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது. 
அதன்படி, மல்லிகைப்பூ கிலோ ரூ.800-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் செண்டுப்பூ கிலோ ரூ.50, கனகாம்பரம் ரூ.500, செவ்வந்தி ரூ.220, அரளி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.60, துளசி ரூ.30, சம்பங்கி ரூ.300, கோழிக்கொண்டை ரூ.70-க்கும் விற்பனை ஆனது.

Next Story