கோவில் சுவர் இடிந்து விழும் அபாயம்


கோவில் சுவர் இடிந்து விழும் அபாயம்
x
தினத்தந்தி 28 Feb 2022 10:29 PM IST (Updated: 28 Feb 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

லெட்சுமாங்குடியில் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்பதால் கோவில் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
லெட்சுமாங்குடியில் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்பதால் கோவில் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே கலிதீர்த்த ராஜவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி வெண்ணாற்றிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் உள்ளது. பாசன வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், பாசன வாய்க்காலில் சரிவர ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் பல ஆண்டுகளாக செல்வதில்லை.
இதனால் பாசன வாய்க்காலில் பல ஆண்டுகளாக சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. 
கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்
மேலும் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில்  போலீஸ் நிலையம் எதிரே உள்ள கலிதீர்த்த ராஜ விநாயகர் கோவிலையொட்டிய பாசன வாய்க்காலில் பொருத்தப்பட்ட குழாய்கள் பழுதடைந்த நிலையில் சாக்கடை தண்ணீர் செல்ல முடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலின் தடுப்பு சுவர் இடிந்து  விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்பட  வாய்ப்பு உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்‌. 
சாக்கடை தண்ணீர் செல்ல நடவடிக்கை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே கலிதீர்த்த ராஜவிநாயகர் கோவிலையொட்டிய பாசன வாய்க்காலில் பொருத்தப்பட்ட பழுதடைந்த குழாய்களை சீரமைத்து, சாக்கடை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---


Next Story