மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்
x
தினத்தந்தி 28 Feb 2022 10:35 PM IST (Updated: 28 Feb 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் வழங்கினார்.

ராமநாதபுரம்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அறுவை சிகிச்சை செய்யவும் உதவி அளிக்கப்படுகிறது. 
இதன்படி மாவட்டம் முழுவதும் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 378 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான 428 உதவி உபகரண பொருட்கள் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.19 லட்சத்து 12 ஆயிரத்து 370 மதிப்பீட்டில் பெறப்பட்டு உள்ளது. இந்த நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களின் பரிந்துரையின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 428 உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
உபகரணங்கள்
அந்த உபகரணங்களை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் வழங்கினார். இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ஆரோக்கியசாமி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கோவிந்தராஜன், கணேச பாண்டியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், பாஸ்கரன், தினசேகர், பாலமுருகன், முருகேசுவரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story