போலீசார் மீது எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்
போலீசார் மீது எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
மதுரை கோச்சடையை சேர்ந்த ஜெயா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எனது 17 வயது மகன் முத்துகார்த்திக்கை, கடந்த 2019-ம் ஆண்டில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் அழைத்துச்சென்றனர். அங்கு போலீசார் என் மகனை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. போலீசார் என் மகனை சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாக தாக்கியதால்தான் அவர் இறந்துவிட்டார். எனவே எனது மகனின் இறப்புக்கு காரணமான எஸ்.எஸ். காலனி போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இதுதொடர்பான முதற்கட்ட அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அறிக்கை கிடைத்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் மகன் வழக்கு மற்றும் அந்த வழக்கில் தொடர்புடைய போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story