ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மொபட் மோதி தீப்பிடித்தது கட்டிட மேஸ்திரி விவசாயி படுகாயம்


ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மொபட் மோதி தீப்பிடித்தது  கட்டிட மேஸ்திரி விவசாயி படுகாயம்
x
தினத்தந்தி 28 Feb 2022 11:30 PM IST (Updated: 28 Feb 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மொபட் மோதி தீப்பிடித்தது. இதில் கட்டிட மேஸ்திரி விவசாயி படுகாயம்

ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது35). கட்டிட மேஸ்திரி. நேற்று இவர், சூளகிரி அருகே சாமல்பள்ளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்றார். அவருடன் தமிழரசன் என்பவரும் உடன் வந்தார். ஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதி அருகே வந்த போது, எதிரே வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி திடீரென தீப்பிடித்து கொண்டன. இதில் 2 வாகனங்களும் கருகி சேதமடைந்தன. மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த தேவராஜ் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் மொபட்டில் வந்த பீர்ஜேபள்ளியை சேர்ந்த விவசாயி சிவப்பா (36) படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழரசனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story