உக்ரைன்நாட்டில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தவிக்கும் ஜோலார்பேட்டை மாணவரை மீட்டுத்தரக்கோரி பெற்றோர் கோரிக்கை
உக்ரைன்நாட்டில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தவிக்கும் ஜோலார்பேட்டை மாணவரை மீட்டுத்தரக்கோரி அவருடைய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டை
உக்ரைன்நாட்டில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தவிக்கும் ஜோலார்பேட்டை மாணவரை மீட்டுத்தரக்கோரி அவருடைய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுரங்கப்பாதையில் தவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63). விறகு மண்டி நடத்தி வருகிறார். இவரது மகன் சுகேஷ்வர் உக்ரைன் நாட்டில் இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது, ரஷியா போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அங்குள்ள தமிழக மாணவர்கள் உணவுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள். மாணவர் சுகேஷ்வர் அங்குள்ள மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பலமாணவர்களும் அவருடன் தங்கி உள்ளனர்.
மீட்டுத்தர கோரிக்கை
இது குறித்து மாணவர் சுகேஷ்வர் தனது பெற்றோர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உக்ரைன் நாட்டில் தவிக்கும் மாணவர்களை மீட்கும் வகையில் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜாசேகரை, மாணவரின் பெற்றோர் சந்தித்து தங்கள் மகனை மீட்டுத் தரக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து மனு கொடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story