புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்றவாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பூங்கா
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், காஜாபேட்டை மெயின் ரோட்டில் இருக்கக்கூடிய ரெங்கசாமி பூங்கா,கடந்த 10 வருடத்திற்கும் மேல் பயன்பாடற்று பூட்டிய நிலையில் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவற்றை களைந்து, இதை ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், வணிக வளாகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆபேல் குணசீலன், காஜாபேட்டை, திருச்சி.
ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்காததால் பக்தர்கள் அவதி
திருச்சி பிச்சாண்டார் கோவில் ரெயில் நிலையம் மிகவும் பழமையானது. இந்த ரெயில் நிலையத்தில் நிற்கும் பாசஞ்சர் ரெயில்கள் மூலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து இறங்கி கோவிலுக்கு சென்று வந்தனர். இந்த ரெயில் நிலையத்தில் பாசஞ்சர் ரெயில்கள் நிற்கும் , தற்போது அதை எக்ஸ்பிரஸ் ரெயில் என்று மாற்றி உள்ளதால் ஸ்ரீரங்கத்தில் இறங்க வேண்டியுள்ளது . சமயபுரம் பக்தர்கள் இந்த ரெயில் நிலையத்தில் இறங்கி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்வது சுலபம். ஆகவே ரெயில்வே நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து மேற்கண்ட ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்த ஏற்பாடு செய்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலசுப்பிரமணியன் , கூத்தூர் , திருச்சி.
Related Tags :
Next Story