தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 March 2022 12:45 AM IST (Updated: 1 March 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நாய்கள் தொல்லை
  விருதுநகர் மாவட்டம் காரனேந்தல்  கிராமத்தில் தெரு நாய்கள் சாலைகளில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியும் கடித்தும் வருகின்றது. இதனால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகூர்பிச்சை, காரனேந்தல். 
சேதமடைந்த குடிநீர் குழாய்
  மதுரை மத்திய தொகுதி செக்கடி தெருவில் குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்படுகின்றது. இந்த குழாயில் இருந்து வெளியேரும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. இதன் மூலம் கொசுகள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான்சன், மதுரை.

 

வேகத்தடை தேவை 
 விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி மற்றும் டி.கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில்  வேகத்தடை இல்லை. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகனங்களின் வேகத்தை குறைக்க இந்த வழித்தடத்தில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பிரியதர்ஷினி, விருதுநகர்.

Next Story