கோஷ்டி தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து


கோஷ்டி தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 1 March 2022 1:00 AM IST (Updated: 1 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோஷ்டி தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது

பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சீனிவாசன்(வயது 32). இவரும், இவரது நண்பர் பி.உசிலம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் துரைசாமியும்(31) வேகுப்பட்டி நால்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கும், சுல்லாம்பட்டியைச் சேர்ந்த பிரபு(23), அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (35) மற்றும் சிலருக்கும் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டது. அப்போது சீனிவாசன் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார். இதனை தட்டிக்கேட்ட துரைசாமிக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து பிரபு, தினேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தார்.


Next Story