லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது


லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது
x
தினத்தந்தி 1 March 2022 1:41 AM IST (Updated: 1 March 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு, 
போலீஸ் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 
மாயம் 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி பகுதியை சேர்ந்தவர், ராமராஜ் (வயது 55).   கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் கூமாபட்டி போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக ராமராஜின் உறவினரான கண்ணன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது செல்போனையும், ஆதார் அட்டையையும் போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. 
இந்த சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ராமராஜ் வீடு திரும்பினார். இதையடுத்து தனது செல்போன் மற்றும் ஆதார் கார்டை திரும்ப கொடுக்குமாறு கண்ணன் கேட்டார். அதற்கு சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீஸ் ஏட்டு ரேணுகாந்த் ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு கண்ணன் ரூ.7 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறியதாகவும் தெரிகிறது. 
ரூ.7 ஆயிரம் லஞ்சம் 
இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணன் இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாரதி பிரியா ஆகியோர் கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அந்த சமயத்தில் கண்ணனிடம் இருந்து ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், போலீஸ் ஏட்டு ரேணுகாந்த் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு பிரிவு ேபாலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.
2 பேர் கைது 
 பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Next Story