ஜல்லிக்கட்டுக்கான அனுமதி திடீர் ரத்து


ஜல்லிக்கட்டுக்கான அனுமதி திடீர் ரத்து
x
தினத்தந்தி 1 March 2022 1:46 AM IST (Updated: 1 March 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கான அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. இதனால் அந்தப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் விசுவக்குடியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது. விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story