தம்பதியை திட்டி மிரட்டியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது


தம்பதியை திட்டி மிரட்டியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 March 2022 1:46 AM IST (Updated: 1 March 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

தம்பதியை திட்டி மிரட்டியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மண்டபத்தேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவி புஷ்பா (வயது 31). இவருக்கும், அதே தெருவை சேர்ந்த ஆறுமுகம்(55) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை புஷ்பா வீட்டின் அருகே சென்று, ஆறுமுகம், அவரது மனைவி செண்பகவள்ளி(47), மகன்கள் அபினாஷ்(27), ஆகாஷ்(24) ஆகியோர் புஷ்பாவையும், அவரது கணவர் கோபாலகிருஷ்ணனையும் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து புஷ்பா கொடுத்த புகாரின்பேரில் ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேர் மீதும் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story