ஊழல் புகார்; மாநகராட்சி அலுவலகங்களில் போலீசார் மீண்டும் சோதனை
பெங்களூரு மாநகராட்சியில் நடந்த ஊழல், முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக, மாநகராட்சி அலுவலகங்களில் நேற்று மீண்டும் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் நடந்த ஊழல், முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக, மாநகராட்சி அலுவலகங்களில் நேற்று மீண்டும் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பெங்களூரு மாநகராட்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏரளாமான புகார்கள் வந்திருந்தது. இதையடுத்து, கடந்த மாதம்(பிப்ரவரி) 25-ந் தேதி பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களின் அலுவலகங்கள், தலைமை அலுவலகம், இணை கமிஷனர்கள் அலுவலகங்கள் என 27 இடங்களில் ஊழல் தடுப்பு படை போலீசாா் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது மாநகராட்சி அலுவலகங்களில் நடந்த முறைகேடுகள் தொடாபான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியானது. அதாவது விளம்பர பிரிவில் ரூ.230 கோடி ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்கள், ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து என்ஜினீயர்கள், ஒரே பணிக்கு, 2 ரசீதுகள் போட்டு பணம் விடுவித்திருப்பது உள்பட 45 முக்கிய ஆவணங்கள் போலீசாரின் கைக்கு சிக்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
மீண்டும் போலீசார் சோதனை
இந்த நிலையில், நேற்று மீண்டும் ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று மாநகராட்சி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். குறிப்பாக மாநகராட்சியின் சுகாதார பிரிவு அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசவ ஆஸ்பத்திரிகளில் கவனித்து வரும் முக்கிய அதிகாரியின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆவணங்களையும் போலீசார் பரிசீலனை நடத்தினார்கள்.
பரபரப்பு
இந்த சோதனையின் போது ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்தது தொடா்பான முக்கிய ஆவணங்கள் ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநகராட்சி அலுவலகங்களில் சிக்கிய ஆவணங்களை போலீசார் தீவிரமாக பரிசீலனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story