காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை


காதல் மனைவி பிரிந்து சென்றதால்  தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 March 2022 2:21 AM IST (Updated: 1 March 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள மாரனேரி பூலாவூரணியை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மகன் காளிராஜ் (வயது29). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 8 மாதமாக பூலாவூரணியில் குடியிருந்து வந்ததாகவும், குடும்ப தகராறில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ராஜலட்சுமி, தனது கணவன் காளிராஜை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காளிராஜ் குடிபழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதற்கிடையில் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காளிராஜ் தாய் வீர லட்சுமி மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
சிவகாசி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால்  தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். 

Next Story