காங்கிரஸ் பாதயாத்திரை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கமல்பந்த் ஆலோசனை


காங்கிரஸ் பாதயாத்திரை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கமல்பந்த் ஆலோசனை
x
தினத்தந்தி 1 March 2022 2:35 AM IST (Updated: 1 March 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் காங்கிரஸ் பாதயாத்திரை நடைபெறுவதையொட்டி உயர் போலீஸ் அதிகாரிகளுடன், கமல்பந்த் ஆலோசனை நடத்தினார். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் காங்கிரஸ் பாதயாத்திரை நடைபெறுவதையொட்டி உயர் போலீஸ் அதிகாரிகளுடன், கமல்பந்த் ஆலோசனை நடத்தினார். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

கமல்பந்த் ஆலோசனை

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி ராமநகரில் இருந்து பெங்களூருவை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். வருகிற 3-ந் தேதி அந்த பாதயாத்திரை பெங்களூரு பசவனகுடியை வந்தடைய உள்ளது. அன்றைய தினம் பசவனகுடியில் காங்கிரஸ் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை நேற்று மாலையில் பெங்களூருவை வந்தடைந்தது.

இதையடுத்து, இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பெங்களூருவில் 3 நாட்கள் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இதையொட்டி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

அசம்பாவிதங்கள் நடக்க கூடாது

இந்த கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனா்கள், இணை போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெறும் காங்கிரஸ் பாதயாத்திரையின் போது எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெற கூடாது. பாதயாத்திரை நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்கள் செல்லும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும். 

குறிப்பாக பாதயாத்திரை முடிந்து இரவு நேரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தங்கும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டும். 3 நாட்களும் பெங்களூருவில் வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்படாதப்படிக்கு மாற்று பாதைகளை ஏற்பாடு செய்யுங்கள். அதே நேரம் பாதயாத்திரை நடைபெறும் இடங்களில் யாரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு, கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.

Next Story