தாளவாடி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பள்ளிக்கூட மரத்தடியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
தாளவாடி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பள்ளிக்கூட மரத்தடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பள்ளிக்கூட மரத்தடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த குன்னம்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த 238 மாணவ-மாணவிகள் அங்கு படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து மரத்தடியில் பெற்றோர்களுடன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, நில வருவாய் ஆய்வாளர் ராக்கிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அடிப்படை வசதி
அப்போது மாணவ-மாணவிகள் அதிகாரிகளிடம், ‘பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை. வகுப்பறையில் இருக்கைகள் இல்லை. தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை இல்லை. இதுபற்றி பலமுறை அரசு அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு உடனே அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். கோரிக்கை நிைறவேறினால்தான் போராட்டத்தை கைவிடுவோம்' என்றார்கள்.
அதற்கு அதிகாரிகள், உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி நாளைக்குள் (புதன்கிழமை) தாசில்தாரிடம் கொடுங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள்.
அதை ஏற்றுக்கொண்டு மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றார்கள்.
Related Tags :
Next Story