உக்ரைனில் உள்ளவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை அணுகி தெரிவிக்கலாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள்
உக்ரைனில் உள்ளவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை அணுகி தெரிவிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
உக்ரைனில் உள்ளவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை அணுகி தெரிவிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
தொடர்பு அலுவலர்கள் நியமனம்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டில் கடந்த 24-ந் தேதி முதல் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உக்ரைனில் சிக்கி தவிக்கின்ற சூழ்நிலையை அறிந்து அவர்களை மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசு சார்பில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 15 பேரை மீட்கக்கோரி கோரிக்கைகள் வரப்பெற்றன. அதன் அடிப்படையில் அவர்களை மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்த்துறை ஆணையருக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்
இந்த சூழ்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர்கள் உக்ரைன் நாட்டில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) 9445008137, 0424 2260211 ஆகிய எண்களிலும், collectorate.csecerd@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தின் 1070 என்ற எண்ணிலும், சென்னை அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையாளர் ஜெசிந்தா லாசரசை 94458 69948 என்ற எண்ணிலும், டெல்லி உக்ரைன் அவசர உதவி மையத்தின் 92895 16716 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story