புகார் பெட்டி
புகார் பெட்டி
கழிவுநீர் ஓடை வேண்டும்
பூதப்பாண்டி அழகம்மன்கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் இதுவரை கழிவுநீர் ஓடை அமைக்கவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பாய்ந்து செல்கிறது. பல இடங்களில் சாக்கடை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தி அதிக மாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அழகம்மன்கோவில் தெரு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.பாரதி, அழகம்மன்கோவில் தெரு.
போக்குவரத்து நெருக்கடி
குமரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினமும் ஏராளமான கனரக வாகனங்களில் கருங்கல், ஜல்லி போன்ற கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ஊரக சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு, பகலாக அதி வேகமாக செல்கின்றன. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, கனரக வாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களிலாவது கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீமான், குலசேகரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட வண்டிகுடியிருப்பு பகுதியில் இருந்து பறக்கைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் செல்கிறார்கள். இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் பாதசாரிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரகாஷ், வண்டிகுடியிருப்பு.
தெருவிளக்குகள் வேண்டும்
சுசீந்திரம் ஆஸ்ரமம் அருகே உள்ள புறவழிச்சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். இந்த பகுதியில் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கவில்லை. இதனால், இரவு நேரங்களில் ெசல்கிறவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, ெபாதுமக்கள் நலன்கருதி புறவழிச்சாலையில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சித்தார்த்தன், வடக்குதாமரைகுளம்.
சுரங்க பாதையில் தேங்கும் தண்ணீர்
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்களின் பயன்பாட்டுக்காக 4 வழிச் சாலை அருகே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால், சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-செல்வகுமரன், மீனாட்சிபுரம்.
சுற்று சுவர் கட்டப்படுமா?
குருந்தன்கோட்டில் ஒரு அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் மருந்து வாங்கி செல்கிறார்கள். இதன் மிக அருகில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மதுக்கடைக்கு வரும் மது பிரியர்களால் மருந்து வாங்க வரும் நோயாளிகளுக்கு பல இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனை வளாகம் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியாக காட்சியளிக்கிறது. எனவே, மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- டி.தேவதாஸ், குருந்தன்கோடு.
சுகாதார சீர்கேடு
வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பறக்கவிளை சந்திப்பில் குடியிருப்பு மிகுந்த பகுதியில் சாலையோரம் கழிவுநீர் உறிஞ்சி குழி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குழியில் கழிவுநீர் நிறைந்து சாலையில் பாய்ந்து செல்கிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் சாக்கடை நீர் பாய்ந்து செல்வதால் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சுகாதார சீர்கேட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ்குமார், வெள்ளாங்கோடு.
Related Tags :
Next Story