கருமலைக்கூடல் அருகே மருமகளை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
கருமலைக்கூடல் அருகே மருமகளை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்:
கருமலைக்கூடல் அருகே மருமகளை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
விவசாயி
சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் அருகே துறையூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65), விவசாயி. இவருடைய மகன் வேல்முருகன், லாரி டிரைவர். அவருடைய மனைவி அம்பிகா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது மருமகள் அம்பிகாவின் கையை பிடித்து இழுத்து அவரை ஆசைக்கு இணங்குமாறு கூறி உள்ளார். இதற்கு அவர் மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் மருமகளை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அம்பிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெரியசாமியை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் மருமகளை கொன்ற பெரியசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் அவரை கோவை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துசென்றனர்.
Related Tags :
Next Story