பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு: ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில்-சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்:
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஆட்டோ டிரைவர்
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி முயல்நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளை தனது ஆட்டோவில் ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு அழைத்து செல்லாமல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு ஆட்டோ டிரைவரிடம் இருந்து தப்பித்து அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த ஒருவரிடம் நடந்த விவரத்தை கூறி அழுதுள்ளார். பின்னர் ஆடு மேய்த்த நபர், அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
5 ஆண்டுகள் ஜெயில்
இது குறித்து மாணவியின் பெற்றோர் தரப்பில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ டிரைவர் முருகனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story