உடுமலை பழனி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிதீவிரம்
உடுமலை பழனி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிதீவிரம்
உடுமலையை அடுத்துள்ள பாலப்பட்டி அருகே உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நான்கு வழிச்சாலை
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தில் பொள்ளாச்சி முதல் கமலாபுரம் வரை 131.96 கி.மீ.தூரத்திற்கு சாலை அமைக்க கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான பிரதான சாலை மட்டுமின்றி பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கிராமப்புறங்களில் புறவழிச்சாலைஅமைகிறது.
கிராமப்புறங்களில் நான்கு வழிச்சாலைக்காக நிலம் எடுக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்தல், திட்டவடிவமைப்பின்படி உயரமாக மண் கொட்டப்பட்டு, ஜல்லிகற்கள் நிரப்பப்பட்டு, தார்சாலை,
சாலையோரங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைத்தல், பாலங்கள் மற்றும்
உயர்மட்ட பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நகரபகுதிகளை நான்கு வழிச்சாலையுடன் இணைக்கும் வகையில் 47 கி.மீ.தூரத்திற்கு அணுகு சாலையும் அமைக்கப்படுகிறது.
பாலப்பம்பட்டி
இதில் உடுமலை பகுதியில், உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கணபதிபாளையம் பிரிவுக்கு அருகில் இருந்து நான்கு வழிச்சாலை தொடங்குகிறது. இந்த சாலை சின்னவீரம்பட்டி ஊராட்சி பகுதியில் திருப்பூர் சாலை, தாராபுரம் சாலை ஆகிய சாலைகளின் குறுக்கே கடந்து உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பம்பட்டி அருகே வந்து இணைகிறது. இந்த சாலையில் இணையும் பகுதியில் இருந்து பழனிசாலையில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் போக்குவரத்து உள்ள நிலையில் சாலையின் பாதிப்பகுதிக்கு அடுத்துள்ள பகுதியில் உயரமான அளவிற்கு மண் கொட்டப்பட்டு மேடுஆக்கும்பணிகள்நடைபெற்று வருகிறது. அங்குபணிகள் முடிந்த பிறகு மற்றொரு பகுதியில் மண் கொட்டி மேடு ஆக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story