குன்னூரில் தென்படும் அரிய வகை பறவைகள்


குன்னூரில் தென்படும் அரிய வகை பறவைகள்
x
தினத்தந்தி 1 March 2022 5:12 PM IST (Updated: 1 March 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருவதால் குன்னூரில் அரிய வகை பறவைகள் தென்படுகின்றன. அதனை புகைப்படம் எடுக்க பறவை ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கோத்தகிரி

வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருவதால் குன்னூரில் அரிய வகை பறவைகள் தென்படுகின்றன. அதனை புகைப்படம் எடுக்க பறவை ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

அரிய வகை பறவையினங்கள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில், தென்கிழக்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழையுடன், பனிக்காலமான டிசம்பரிலும் மழை பெய்ததால், வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி உள்ளன. குன்னுார் மலை பள்ளதாக்கு பகுதிகள், பசுமைமாறா காடுகளாக மாறியதுடன், வனப்பகுதிகளில் பூக்கும் தாவரங்கள், பறவைகள் விரும்பி உண்ணும் ஈச்ச பழங்கள் அதிகரித்துள்ளன.
இப்பகுதிகளில் பல்வேறு அரிய வகை பறவையினங்கள் முகாமிட்டுள்ளன. பல ஆண்டுகளாக, பார்ப்பதற்கு அரிதாக இருந்த, 'இண்டியன் கிரேட் ஹார்ன்பில்' எனப்படும் இருவாச்சி பறவை தற்போது இங்கு தென்படுவதாக வன ஆர்வலர்கள் கூறினாாகள். 

பறவைகள் இனப்பெருக்கம் அதிகரிப்பு

இந்த பறவை மட்டுமின்றி ஆரஞ்ச் ப்ளை கேச்சர், இண்டியன் ராபின் புளூ உள்பட பல பறவைகளும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. அரிய பறவைகள் காணப்படுவதால், பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், பறவைகளை புகைப்படம் எடுக்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகளும் அரிய வகை பறவைகளைக் கண்டுகளித்து செல்கின்றனர்.
குன்னூர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெய்த மழையால் வன அடர்த்தி கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அழிவின் பிடியில் உள்ள அரிய வகை பறவைகள் இனப்பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Next Story